இளம் பெண்ணை கற்பழித்து கணவனை கொலை செய்தவர் 43 ஆண்டுகளுக்கு பின் கைது!

அமெரிக்காவில் ஒரு இளம் தம்பதி காலாற நடக்கச் சென்றபோது, அந்த காதலனை சுட்டுக்கொன்றுவிட்டு அந்த இளம்பெண்ணை வன்புணர்ந்தார் ஒருவர்.

Wyoming என்ற இடத்தில், ஜாலியாக முகாமிட்டுத் தங்கியிருந்த David Schules (25). Ellen Matheys (24) என்ற தம்பதியர், காலாற நடந்து வரலாம் என புறப்பட்டிருக்கிறார்கள். அப்போது மர்ம நபர் ஒருவர் Davidஐ சுட்டுக்கொன்றுவிட்டு, Ellenஐ துரத்திப் பிடித்து, வன்புணர்ந்து, பிறகு அவரையும் சுட்டுக்கொன்றிருக்கிறார். இது நடந்தது 1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி.

கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் குற்றவாளி சிக்காமலே இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, அந்த காலகட்டத்தில், DNA சோதனைகள் பிரபலமான நிலையில், அதன் அடிப்படையில் ஒருவரை பொலிசார் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

அதாவது, வன்புணரப்பட்ட Ellenஉடைய கால்சட்டையில் இருந்த DNAவை சேகரித்து வைத்திருந்த பொலிசார், அது யாருடைய DNAவுடனாவது பொருந்துகிறதா என்று சோதிக்க, அது Wisconsin என்ற இடத்தில் வாழும் Raymand Vannieuwenhoven (84) என்ற நபரை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆகவே, அவரது வீட்டுக்கு சாதாரண நபர்கள் போல வந்த பொலிசார், ஒரு சர்வே எடுப்பதாகவும், அதில் கலந்துகொள்ள முடியுமா என்றும் கேட்க, Raymandம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் சர்வேயில் பதிலளித்த காகிதத்தை ஒரு கவருக்குள் வைத்து, அதிலுள்ள பசையை நாவால் நக்கி ஒட்டும்படி பொலிசார் கூற, Raymandம் தன்னை சிக்க வைப்பதற்காக பின்னப்பட்ட வலை அது என்பது தெரியாமலே அப்படியே செய்திருக்கிறார்.

அந்த கவரிலிருந்த எச்சிலைக் கொண்டு DNA சோதனை செய்ததில், அந்த DNA, 43 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட, Ellenஉடைய கால்சட்டையில் இருந்த DNAவுடன் பொருந்த, உடனே Raymand கைது செய்யப்பட்டிருக்கிறார்

இரண்டு பேரை கொலை செய்ததற்காக, Raymandக்கு தற்போது இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்தடுத்து அந்த இரண்டு ஆயுள் தண்டனைகளையும் அனுபவிக்கவேண்டும்.

Raymand ஏற்கனவே 80 வயதைக் கடந்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீனும் கிடைக்காது, நினைத்தாலும் அவர் இனி ஒருபோதும் சிறையிலிருந்து விடுதலையாகி வரமுடியாது.

அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப குற்றம் செய்துவிட்டு அப்பாவி போல வாழ்ந்துவந்த Raymand 43 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டபோது, அந்த பகுதியில், அவரது வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் இப்படி ஒரு கொலைகார குற்றவாளி இவ்வளவு நாள் நம் பகுதியில் வாழ்ந்தாரா என ஆச்சரியப்பட்டார்களாம்.

காலம் தாழ்ந்த நீதியானாலும், பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைத்ததே என்ற நிம்மதி மட்டும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கொல்லப்பட்ட தம்பதியரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *