இலங்கையில் சூப்பர் டெல்டா பரவிவருகிறது வைத்தியர் சந்திம தெரிவிப்பு!

கொழும்பில் தற்போது பரவி வரும் கோவிட் வைரஸ் 100 வீதம் டெல்டா மாறுபாடு என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் பரவுவதை ‘சூப்பர் டெல்டா’ என்று அழைக்கலாம் என்றும் அதன் நடத்தை மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் வெற்றிகரமான தடுப்பூசி செயல்முறை காரணமாக, செப்டம்பர் இறுதியில் சில பலன்களை எதிர்பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்றைய தினம் 4,561 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,931 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *