ஆண்ட்ரியூ ரசல் 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை!

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரை போன்று, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் ப்ரீமியர் லீக் என்னும் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 26ம் தேதி துவங்கிய இந்த தொடரின் நேற்றைய (ஆகஸ்ட் 27) முதல் போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் சைண்ட் லூசியா கிங்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சைண்ட் லூசியா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜமைக்கா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வால்டன் 47 ரன்களும், கென்னார் லீவிஸ் 48 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இதன்பின் வந்த ஹைதர் அலி 45 ரன்களிலும், கேப்டன் ரோவ்மன் பவல் 38 ரன்களிலும் விக்கெட்டை இழந்த பிறகு களத்திற்கு வந்த அதிரடி நாயகன் ஆண்ட்ரியூ ரசல் தனது ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்தி வெறும் 14 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டி.20 போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையிலும் ரசல் இடம்பெற்று பல்வேறு சாதனைகளும் படைத்துள்ளார்.

ஆண்டரியூ ரசலின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ஜமைக்கா அணி 255 ரன்கள் குவித்தது.
.
இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய சைண்ட் லூசியா அணி 17.3 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால், ஜமைக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *