அழகை மெருகூட்ட அறுவை சிகிச்சை செய்த அழகிற்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான மாடல் அழகி  ஒருவர் உடல் பருமனாக இருந்ததால்  அதனை குறைக்க முயற்சி செய்துள்ளார்.

டயட், உடற்பயிற்சி என பல்வேறு வழிகள் மூலம் உடலைக் குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அடுத்தக்கட்ட முயற்சியாக அறுவைச் சிகிச்சையை தேர்ந்தெடுத்துள்ளார்.

எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற முடியும் என்று சொல்ல முடியாது. அது போல் விதி இவரது சிகிச்சையிலும் வேலையைக் காட்டியுள்ளது. சுமார் 14 லட்ச ரூபாய் வரை செலவு செய்து மார்பு பகுதி மற்றும் பின்பகுதியை குறைப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் விதி செய்த சதியால் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல் விரும்பிய அழகைப் பெற்றாலும் அவரால் முன்பைப் போல இயல்பாக உட்கார முடியவில்லை. இதுகுறித்து கூறிய அழகி காசுமி ஸ்குரிட்ஸ், ‘அறுவைசிகிச்சைக்கு பின் நான் எல்லா வேலைகளையும் நின்றுக்கொண்டே செய்கிறேன்.

தூங்கும்போது கூட குப்புறப் படுத்து தான். எந்த இடத்திற்கு சென்றாலும் சாதாரணமாக உட்கார முடியாத சூழலால் தலகாணியுடன் செல்கிறேன். இருந்தாலும் அவர் தன்னுடைய புதிய உருவத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

இந்த உருவத்தை வைத்து தான் முன்பு இருந்ததை விட நிறைய பணம் சம்பாதிக்கிறேன். முதலில் 25,000 அமெரிக்க டாலர் பணம் சம்பாதித்த நான் தற்போது 2,00,000 அமெரிக்க டாலர் பணம் வரை சம்பாதிக்க முடிகிறது’ எனக் கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *