தொடையில் 16 தையல்கள் போடப்பட்ட அர்ச்சனா நடக்க முடியாமல் அவதி!

விஜே அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பல முன்னனி தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றியவர் தான் விஜே அர்ச்சனா. இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் உட்பட அனைவரது நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதே சமயம் எக்கசக்க நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் வந்தது.

இவருக்கு சமீபத்தில் திடீரென்று மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதையடுத்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எப்போ வருவீங்க என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர்.

அதற்கு அவர் கூறியது, இப்போ கூட நான் வர தயாராக இருக்கிறேன். ஆனால் எனது வலது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளனர்.

இதனால் காலில் வலி இருப்பதால் என்னால் தொடர்ந்து நிற்க முடியாது. எனது உடல்நிலை சரியாக சில மாதம் ஆகும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *