தண்ணீரும் ஆபத்தை தரும் ஆய்வில் தகவல்!

தினமும் ஆண்கள் குறைந்தது 2 தொடக்கம் 3 லீற்றர் தண்ணீரும், பெண்கள் 1.6 தொடக்கம் 2.1 லீற்றர் தண்ணீரும் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஒருவரது உயரம், உடற்பருமன், உடற்பயிற்சி செய்யும் முறை ஆகியவற்றுக்கேற்ப இதில் தண்ணீர் குடிக்கும் அளவு இருக்கலாம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இருதய பாதிப்பை தடுக்கலாம் எனவும் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் 44 தொடக்கம் 66 வயதுக்குட்பட்ட 15,792 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது, அதில் 25 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கை முறை ஆய்வுக்கு எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்றும் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தை தரும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *