நாட்டை முடக்கி வைப்பதில் எந்த பயணும் இல்லை மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் ஊடக நிறுவனம் ஒன்றுடம் இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக நாட்டை முடக்கி வைப்பதில் எந்த பயணும் இல்லை. அதற்கமைய, நாட்டை திறக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார பாதுகாப்பு உட்பட கொவிட் தடுப்பு நடவடிக்கையில் இணைந்துள்ள பிரதான தரவு குழுவினர் தங்கள் உயிரை இரண்டாம் பட்சமாக வைத்து செயற்படுகின்றனர்.

அவ்வாறான சூழலில் மக்கள் நாட்டிற்காக தங்கள் ஆதரவுகளை வெளிடுப்படுத்துவற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *