கடந்த 50 ஆண்டுகளில் 1700 ஆபாச படங்களில் நடித்த நடிகருக்கு 4000 பெண்களுடன் தொடர்பு!

கடந்த 50 ஆண்டுகளில் 1,700க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகருக்கு 4,000 பெண்களுடன் தொடர்பு இருந்ததாக, மீடூ வழக்கில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தது நீதிமன்றத்தையே அதிர்ச்சியடைய செய்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ‘ஹாலிவுட்’ என்ற இடத்தில் பல முன்னணித்  திரைப்படத்துறை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட துறை சார்ந்த ஆயிரக்கணக்கானோர்  வசிக்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டு ‘மீடூ’ (பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக  #metoo என்ற ஹாஸ்டேக் மூலம்  வெளியிட்டது) விவகாரம் வெடித்த போது பல  நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல பெண்கள் பாலியல் பலாத்கார புகார்களை  தெரிவித்தனர். இதுபோன்ற புகார்களை விசாரிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில்  உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் பாதிக்கப்பட்டவர்  அளிக்கும் புகாரின் அடிப்படையில், போலீசாருக்கு சில பரிந்துரைகளை  வழங்குவர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை  எடுத்து வருகின்றனர். இந்த உயர்மட்ட குழு இதுவரை 20 ஆண்கள் மீது  குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

அவர்களில் திரைப்பட நடிகர் மொகுவல்  ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில்  உறுதிசெய்யப்பட்டதால், தற்போது அவர் நியூயார்க்கில் உள்ள சிறையில் 23  ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மற்றொரு பாலியல் வழக்கில்  கலிபோர்னியா நீதிமன்றத்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆபாச நடிகர் ரான் ஜெர்மி (68) என்பவர் மீது 15 முதல் 51 வயதுக்குட்பட்ட 21 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேலும் கூறுகையில், ‘1970ம் ஆண்டுகளில் (கிட்டதட்ட 50 ஆண்டு) இருந்து சுமார் 1,700க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் ரான் ஜெர்மி நடித்துள்ளார். அவர் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் 2020 ஜூனில் அவர் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்றொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். நீண்டகாலமாக ஆபாச படங்களில் நடித்து கொடிகட்டி பறந்த அவர், தற்போது அவரது தொழில் படுத்துவிட்டதால் வீட்டோடு உள்ளார். வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது’ என்றார்.

இதுகுறித்து ரான் ஜெர்மியின் வழக்கறிஞர் ஸ்டூவர்ட் கோல்ட்ஃபார்ப் கூறுகையில், ‘ரான் ஜெர்மி மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். அவருக்கு 4,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு உள்ளது. இவர்களில் பல பெண்கள் இவரை நாடி வந்தனர். பலரை அவர் ஒதுக்கிவிட்டார். யாரோ சிலர் சொல்லும் காரணத்துக்காக அவரை பாலியல் குற்றவாளி என்று கூறிவிடமுடியாது’ என்றார். 68 வயதான ஆபாச பட நாயகன் ரான் ஜெர்மி மீதான குற்றச்சாட்டுகள், அதுதொடர்பான நீதிமன்ற விசாரணை விபரங்கள் இன்று ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *