ஊரடங்கால் வேலையை இழந்தவர் கோடீஸ்வரராக மாறி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்!

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவித்து வந்த இளைஞன், தற்போது கோடீஸ்வரனாக மாறி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

செனகல் நாட்டைச் சேர்ந்தவர் Khaby Lame. 21 வயது மதிக்கத்தக்க இவர், தன்னுடைய சி்று வயதிலே இத்தாலிக்கு சென்று அங்கு குடிபெயர்ந்துவிட்டார்.

அதன் பின் அங்கிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இவரின் வேலை பறிபோனது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

ஒரு பக்கம் வறுமை, நாள் முழுவதும் சும்மா இருக்கிறோமே என்ற ஏக்கம் போன்றவையால், இவரின் கவனம் பொழுதுபோக்கிற்காக டிக் டாக் பக்கம் சென்றுள்ளது.

அதன் பின் தான் இவருடைய வாழ்க்கையே மாறியுள்ளது. டிக்டாக்கிலேயே இரண்டாவது அதிகம் பின்பற்றும் நபராக மாறினார். முதல் இடத்தில், அமெரிக்க -பிலிப்பினோ பாடகி பெல்லா போர்ச் உள்ளார்.

முதலில் சாதரணமாக வீடியோ பதிவிட்டு வந்த இவர், அதன் பின் தன்னுடைய செய்கை மூலமே பலரையும் கவர வைத்தார்.

அதில் குறிப்பாக, கார் கதவிடுக்கில் மாட்டிக் கொள்ளும் சட்டையை எப்படி எடுப்பது என்ற வீடியோ மிகவும் பிரபலம். இந்த வீடியோ மட்டும் இதுவரை 158 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

அதன்பிறகு அவர் டிக் டாக்கில் பதிவேற்றும் வீடியோக்கள் அனைத்தும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை எட்டியது. டிக் டாக்கில் மட்டுமின்றி இவரது முகபாவனை அப்படியே மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கும் உதவ, மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இதையடுத்து, இவரைத் தேடி பல வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. உலகின் முன்னணி நிறுவனங்கள் இவரை வைத்து விளம்பரங்கள் எடுத்து வருகின்றன.

இதன் மூலம் வருமானத்தை ஈட்டி வரும், அந்த இளைஞனின் சொத்து மதிப்பு தற்போது 20 கோடியை எட்டியுள்ளது.

ஆனால், அவரோ இன்னும் நான் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை, இத்தனை ஆண்டுகாலம் இத்தாலியில் வசித்து வந்தாலும் இத்தாலி பாஸ்போர்ட் இல்லை, செனகல் நாட்டு பாஸ்போர்ட் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக, அவரால் அமெரிக்காவுக்கு சென்றும் வேலை பார்க்க முடியாது.

தன்னுடைய அம்மாவுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ஒரே ஆசையாக உள்ளது.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *