இலங்கையில் ஊரடங்கிலும் அதிகரிக்கும் கொரோனா!

இன்று மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் இன்றைய நாளில் இதுவரை 4,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் தடவையாக 4,000 ஐ கொரோனா பரவல் கடந்த ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன் ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இதுவே.
ஊரடங்கு காலத்தில் இவ்வாறு கட்டுப்பாடு இன்றி கொரோனா பரவியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *