மறைந்த தலைவர் மங்களவின் மறுபக்கம்!

முன்னாள் வெளிவிவகார/நிதி அமைச்சரும் ஶ்ரீ லங்கா அரசியலில் சந்திரிக்கா/மகிந்த/மைத்திரி என்ற மூன்று ஜனாதிபதிகளை ஆட்சிப்பீடத்தில் அமர வைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தவரும் ஶ்ரீ லங்கா அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருந்தவருமான மங்கள சமரவீர கொரோணா வைரஸின் தாக்கத்தால் மரணமடைந்தது நம்மெல்லோரும் அறிந்தவொன்று.

மங்களவின் மரணத்தின் பின்னர் சமூக பொதுவெளியிலும் வெகுவாக புகழப்படும் ஒருவராக மங்கள காணப்படுகின்றார். ஆனாலும் மங்களவுகென்று கறுப்பான மறுபக்கமொன்று காணப்படுகின்றது என்பதையும் தனது கறுப்பான அந்த மறுபக்கத்தை வெள்ளையாக மங்கள தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் மேறகொண்ட மாற்றங்களையும் எடுத்தியம்புவதற்கு முயற்சிக்கின்றோம்.

1983ம் ஆண்டு செய்ற்பாட்டு அரசியலுக்கு நேரடியாக களமிறங்கிய மங்களவுக்கு மாத்தறை மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவி சிறிமாவோவால் வழங்கப்படுகின்றது. 1989 ம் ஆண்டு 11000+ வாக்குகளைப் பெற்று முதன்முறையாக ஶ்ரீ லங்கா நாடாளுமன்ற்த்திற்கு வரும் மங்கள 1994ல் சந்திரிக்காவை ஜனாதிபதியாக முக்கிய காரணமாக திகழ்கின்றார்.

அதன்பிறகு தொடர்ச்சியாக சந்திரிக்காவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து அவ் அமைச்சுக்களில் பாரிய புரட்சிகளைகளை ஏற்படுத்தி ஶ்ரீ லங்கா முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகுந்த கவனத்தைப் பெறுகின்றார்.

2004ல் மகிந்த பிரதமராகி ஜனாதிபதி வேட்பாளருக்கு சந்திரிக்காவுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மங்கள மகிந்தவின் பக்கம் நின்று காய் நகர்த்துகின்றார். 2005ம் ஆண்டே ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டுமென்று உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்து மகிந்தவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்ததும் இதே மங்களதான்.

ஒரு மாதிரியாக ஜனாதிபதி வேட்பாளர் என்ற உறுதியை சந்திரிக்கா மகிந்தவுக்கு கொடுத்ததும் பிரதமராக அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரை நியமிக்க வேண்டுமென்ற அழுத்தத்தினை மகிந்தவுக்கு சந்திரிக்கா வழங்குகின்றார்.

இது தொடர்பாக கலந்துரையாக கதிர்காமரின் கொழும்பு 7 வீட்டில் மகிந்த மங்கள, ஶ்ரீபதி சூரியாராச்சி, ஆகிய நால்வரும் ஒன்றுகூடுகின்றனர். ஶ்ரீபதி சூரியாராச்சி மக்களவின் நெருங்க நண்பரும் அரசியல்வாதியுமாவார்.
மகிந்த ஜனாதிபதியானால் தன்னால் அவருக்கு கீழே பிரதமராகவோ அமைச்சராகவோ பணியாற்ற முடியாது என்பதை நன்றாஅவே அறிந்து வைத்திருந்த கதிர்காமர், எனக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டாம். மங்களவை காட்டி இந்த ஜெண்டில்மானுக்கு பிரதமர் பதவியை வழங்குங்கள் என்று மகிந்தவிடம் கோரிக்கை வைத்தார். மகிந்தவும் பெரிய சத்தமாக சிரித்துக் கொண்டு நான் ஜானாதிபதியானால் கட்டாயம் பிரதமர் மங்களதான் என்று கதிர்காமரிடம் கூறியிருந்தார்.

அன்றிலிருந்து மகிந்தவின் அமைச்சரவையில் பிரதமராகும் கனவுடன் மங்கள மிகவும் மூர்க்கமாக மகிந்தவுக்கு ஆதரவாக ஜனாதிபதித் தேர்தலைநோக்கி வேலைசெய்யத் தொடங்கினார். மகிந்தவை வெல்லவைக்க என்னென்ன வேலைகள செய்ய முடியுமோ அத்தனையையும் மங்கள செய்தார்.

ரணில் பிள்ளையில்லாதவர் ஆகவே ஜனாதிபதியாக தகுதி இல்லாதவர் போன்ற ரணில் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை தனது மீடியா சகாவான ருவன் பேர்டினாண்டஸ் ஊடாக மேற்கொண்டார். (இலங்கையில் தனிநபர் தாக்குதலையும் பொய் பிரச்சாரங்களையும் சேறுபூசும் கலாசாரத்தையும் அறிமுகப்படுத்தியது மங்கள என்றாஅல் அது மிகையாகாது.)

உச்சக் கட்டமாக விடுதலைப் புலிகளை தொடர்புகொண்டு ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் பணம் தருகின்றோமென பேரம் பேசியது மட்டுமல்லாது மகிந்த ஜனாதிபதியானல் விடுதலைப் புலிகள் மீது மென்மையான போக்கை கடைப்பிடிப்போமென உறுதியும் வழங்கி நம்பிக்கைத் துரோகம் செய்ததும் இதே மங்களதான்.

2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் மங்கள-பிரபாகரன் டீலால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகாமல் மங்கள நினைத்ததுபோல் மகிந்தவே ஜனாதிபதியாக பதவியேற்றார்.

மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் பிரதமர் பதவி கிடைக்குமென பெரும் கனவுகளுடன் இருந்த மங்களவுக்கு மகிந்த கொடுத்ததோ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு. ஆனாலும் உள்ளார் மகிந்தவுக்கு பல பல அழுத்தங்கள் கொடுத்து எப்படியாவது பிரதமர் பதவியை வாங்கிவிட வேண்டுமென்று மிகுந்த பிரயத்தனம் செய்த மங்களவுக்கு கிடைத்ததோ மிகுந்த ஏமாற்றமே.

இதன் உச்சக்கட்டம் என்னவென்றால் மகிந்தவுக்கு எதிராக அப்போதைய சூழ்நிலையில் இருந்த வெள்ளைவான் கடத்தல்கள், போர் குற்றங்களை காரணமாக காட்டி மகிந்தவை மறைமுகமாக மிரட்த் தொடங்கினார். அது எதுவும் வேலைக்காகாத நிலையில் அரசாங்கத்திலிருந்து மங்கள வெளியேறியிருந்தார், இல்லை இல்லை மகிந்தவால் வெளியேற்றப் பட்டிருந்தார்,

இதனால் மேலும் கோபமடைந்த மங்கள தனது நண்பனான ஶ்ரீபதி சூரியாராட்சியுடன் இணைந்து மகிந்தவை கடுமையாக வெளியிலிருந்து தாக்கத் தொடங்கினார். புலிகளுக்கு பணம்கொடுத்த கதைகளை ஒவ்வொன்றாக எடுத்துவிடத் தொடங்கினார். மகிந்தவுக்கு எதிரான தரப்புகளுடன் இணைந்து செயலாற்றத் தொடங்கினார்.

தமிழர்களுக்கு ஆதரவாக, மகிந்தவுக்கு எதிராக குரல்கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக (பிரதமர் பதவிக்காகத்தான் இதைச் செய்தார் என்பதை அறியாத) தமிழர்களும் சர்வதேசமும் மங்களவை மகிந்தவுக்கு எதிராக நன்றாக பயன்படுத்தத் தொடங்கினர். மங்களவும் அவர்களது தாளத்துக்கு ஏற்றவாறு நன்றாக நாட்டினுள்ளும் சர்வதேச ரீதியிலும் நன்றாக நடிக்கத் தொடங்கினார்.

மகிந்த மீது மங்களவுக்கு இருந்த கோபம் இறுதிவரை தணியாமலே இருந்தது. அதனாலேயே இறுதிவரை மகிந்தவுக்கு எதிராகவே செய்ற்பட்டு வந்திருந்தார்.

மங்களவுக்கு 2005இல் பிரதமர் பதவி கிடைத்திருந்தால் இன்று நாம் அவரை சமூக வலைத்தளங்களில் தூற்றியிருப்போம். அது அவருக்கு கிடைக்காதபடியால் லிபரல் அரசியல்வாதியென, இனவாதமற்ற அரசியல்வாதியென கொண்டாடுகிறோம்.

அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. நேர்மையானவர் போல தம்மைக் காட்டி பொதுமக்களையும் சர்வதேசத்தையும் கன கச்சிதமாக ஏமாற்றிய முதலாம் நம்பர் பிராடு மங்கள சமரவீர என்றால் அது மிகையாகது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *