கோலியின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பான துவக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் ஓவரின் 5வது பந்தில் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

அதன்பின்னர் புஜாரா சற்று நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரும் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி போட்டியில் துவக்கத்திலேயே 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் கோலி களத்திற்கு வருகையில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இருந்ததால் நிச்சயம் கோலி நிதானமான இன்னிங்சை விளையாடி மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு எதிராக மிகப்பெரிய சாதனை ஒன்றை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தி உள்ளார்.

அந்த சாதனையை யாதெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் வைத்திருந்தார். இந்திய அணி கேப்டன் விராத் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் 7 முறை வீழ்த்தியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்டர்சனும் இன்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதோடு ஏழுமுறை கோலியை ஆட்டமிழக்கச் செய்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

அதற்கு அடுத்த இடத்தில் ஐந்து முறை கோலியை ஆட்டமிழக்க வைத்து ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி, பேட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *