வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அஜித் ரோஹண!

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, தனது செல்பி புகைப்படத்தை வெளியிட்டு தான் நலத்துடன் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் அவருடையது அல்ல என்றும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே செல்பியை வெளியிட்டு வதந்திகளுக்கு பதிலடி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.