பிரபல நடிகர்களை ஓரம் கட்டி கோடியில் புரளும் நடிகர் விஜய்!

தமிழ் நடிகர்களின் சம்பள விடயம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், ரஜினி, அஜித், கமல் என அனைவரையும் ஓரம் கட்டி முதலிடத்தில் நடிகர் விஜய் உள்ளார்.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் விஜய்

இந்தப் பட்டியலில் நடிகர் விஜய் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்ததாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்கு இரண்டு மொழிகளிலும் சம்பளம் கணக்கிடப்பட்டு 120 கோடி ரூபாய் வரை பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

நடிகர் ரஜினிகாந்த்

இந்த பட்டியலில் தற்போது முதல் முறையாக 2வது இடத்திற்கு சறுக்கி உள்ளார். இறுதியாக நடித்த அண்ணாத்த திரைப்படத்திற்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்

இந்தப் பட்டியலில் 55 கோடி ரூபாய் சம்பளத்தில் நடிகர் அஜித் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறார்.

உலகநாயகன் கமலஹாசன்

இந்த பட்டியலில் 4வது இடத்தை தமிழ் சினிமாவின் உலகநாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமலஹாசன் பிடித்துள்ளார். கமலஹாசனின் சம்பளம் 55 கோடி வரை இருக்குமாம்.  

நடிகர் தனுஷ்

இந்த வரிசையில் 5வது இடத்தை நடிகர் தனுஷ் பிடிக்கிறார்.

15 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில் அண்மையில் தெலுங்கு தயாரிப்பாளர் திரைப்படத்தில் நடிக்க 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *