சமயத் தலைவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

இதுவரை தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றி, சமயத் தலைவர்கள் கிராம உத்தியோகத்தர்கள் இன் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்து சமயத் தலைவர்கள் 0714471128 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.

இஸ்லாமிய சமய தலைவர்கள் 0761395362 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

கிறிஸ்தவ சமய தலைவர்களுக்காக 0714061132 எனும் தொலைபேசி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *