கொரோனா நோயாளர்கள் பருக வேண்டிய நீரின் அளவு!

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீற்றருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்று கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறுகிறார்.
இதன்படி ,சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் ,தொற்றாளர்களின் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு (dehydration) நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும்.