உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டுள்ளது!

கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதலானது சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் குறுகிய காலத்துக்குள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றம் அல்ல என பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வழங்கிய விசேட உரையொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களையும் கருத்திற் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடு என்பது வெளிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பான குற்ற விசாரணைகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இது தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பொலிஸ் விசாரணைகள் தொடர்பில் தெளிவு அற்றவர்களினால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *