இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் கடிகாரத்தின் விலை 5 கோடியாம்!

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா, தற்போது மெல்ல மெல்ல ஆல்ரவுண்டர் என்ற அந்தஸ்தை இழந்து வருகிறார்.

இதற்கு காரணம் அவரது முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தான், இதனால் பந்துவீச முடியாமல் திணறிவந்த ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார்.

ஆனால் ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா, இதற்கு காரணம் அவர் வாங்கிய வாட்ச் தானாம்.

சாதாரணமாக கடையில் வாங்கியதை போன்று தெரிந்தாலும், இதன் விலை என்னவோ, சுமார் 5 கோடி மட்டும் தானாம்.

எப்போதும் ஆடம்பரத்தை விரும்பும் ஹர்திக் வாங்கியிருக்கும் அந்த வாட்ச் Patek Philippe Nautilus Platinum 5711 என்பது தானாம்.

இந்த புகைப்படங்களை ஹர்திக் சமூகவலைத்தளத்தில் வெளியிட கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது அவருடைய விருப்பம் என சிலர் கூறினாலும், அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவலாமே என்கின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *