தொடர்ந்து நான்காவது ஆண்டாக LMD வர்த்தக நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த பிரைம் குழுமம்!

இலங்கையின் பாரிய பன்முகப்படுத்தப்பட்ட காணி கட்டட நிறுவனமாக அதன் புகழை தக்க வைத்துக்கொண்டு, பிரைம் குழுமம் 2021ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக LMD சஞ்சிகையால் வருடம் தோறும் வெளியிடப்படும் இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

உள்நாட்டு காணி கட்டட துறையில் வலுவான நிதி வசதிகளைக் கொண்டபிரைம் குழுமம், காணி கட்டடத் துறையில் முதலிடம் பிடித்துள்ளது. காணி கட்டடத் துறையில் முன்னணி வகிக்கும் இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் 134 நிறுவனங்களில் பிரைம் குழுமம் 66வது இடத்தில் உள்ளது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மணகே, ‘தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இதழின் மிகவும் மதிப்பிற்குரிய வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது இதில் இடம்பிடித்தது எளிதான விடயமல்ல. இந்த சாதனையின் உந்து சக்தியாக விளங்கும் எங்கள் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இந்த நாட்டின் காணி கட்டடத் துறையில் பிரைமின் பெயரை முதலிடத்திற்கு உயர்த்த தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

வாடிக்கையாளர்களுக்கு 25 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பராமரிக்க நாங்கள் வழங்கிய தரம் மற்றும் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவைகளை சர்வதேச தரத்திலான வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்குவதற்கான எங்கள் நிறுவன வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். இந்த மதிப்பீடு கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் புதிய பொதுத் தன்மையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க பெரும் பலத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.’ என அவர் தெரிவித்தார்.

இன்று, தனது பெருநிறுவனப் பயணத்தின் 26 ஆண்டுகளை நிறைவு செய்த பிரைம் குழுமம், இலங்கையில் காணி கட்டட புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. பரந்த அளவிலான வர்த்தகங்களால் ஆன பிரைம் குழுமத்தில், Prime Lands Residencies PLC, Prime Finance PLC மற்றும் HNB Finance PLC ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் Prime Homes Australia மற்றும் Bhoomi Realty ஆகிய நிறுவனங்களும் பிரைம் குழுமத்திற்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசு வீட்டுமாடிக் கட்டடத் தொகுதி மற்றும் காணி கட்டட நிறுவனம் 2020/21 நிதியாண்டில் சிறந்த நிதி செயல்திறனாக 7.7 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 2019/20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 35% வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜூன் 2021இல், நிறுவனம் 2.25 பில்லியன் ரூபா மதிப்புள்ள பங்குகளை வாங்க விரும்பும் 2,233 பங்குதாரர்களின் இலக்கை தாண்டி 1.95 பில்லியன் ரூபாவுக்கான ஆரம்ப பொது சலுகையுடன் பங்குச் சந்தையில் நுழைந்தது. பிரைம் குழுமத்தின் முதல் சொகுசுமாடி வீட்டுத் திட்டமான நீர்கொழும்பில் Prime Amber Skye, இலங்கையில் காணி கட்டடத் துறையில் முதலாவது Online virtual Property அணுகுமுறையுடன் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. நீர்கொழும்பு கடற்கரைக்கு அருகில் Prime Amber Skye சொகுசு வீட்டுத் தொகுதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்ப நாளில் Online Virtual Property அணுகல் மூலம் பிரைம் குழுமம் மொத்த விற்பனையில் 30% சாதனையைப் அடைய முடிந்தது.

இதுவரை, நிறுவனம் 30 தனிநபர் வீட்டுத் திட்டங்களை, நாட்டின் 18 மாவட்டங்களில் மேற்கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலும் 42 அடுக்குமாடி வீட்டுத் திட்டங்களை முன்னெடுத்து கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைத்து வருகின்றது. கடந்த காலங்களில், இலங்கையில் அடுக்குமாடி வீட்டுவசதிகள் திட்டங்களானது கொழும்பு நகரத்தில் மட்டுமே இருந்தது என்றாலும், இந்த சிந்தனையை இலங்கையின் புறநகர் நகரங்களுக்கு விரிவுபடுத்துவதில் நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது.
பிரைம் குழுமம் 26 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் காணி கட்டட விற்பனைத் துறையில் முதலிடத்தில் உள்ளது. Affordable Luxury என்ற எண்ணத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்திய பிரைம் குழுமம், கொழும்புக்கு வெளியே சொகுசு வீட்டுத் தொகுதிகளை மலிவு விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுத்தது. பிரைம் குழுமம் தற்போது 18 மாவட்டங்களில் செயல்படுவதால் சுமார் 75,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பிரைம் குழுமம், இலாபத்திற்காக மட்டுமல்லாமல் சமூகத்தில் பொறுப்பான குழுவாகவும், கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை அதன் நிறுவன சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையின் மூலம் பலப்படுத்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, இலங்கை காணி கட்டட விற்பனைத் துறையில் முதன்முறையாக, பிரைம் குழுமம் சர்வதேச Moody’s  சேவைகள் மற்றும் இணை ICRA Lanka கடன் தரப்படுத்தலில் “[SL] A- (Stable)” கடன் மதிப்பீட்டைப் பெறுவதன் மூலம் அதன் நிதி ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்க முடிந்தது. தற்போது, நாடளாவிய ரீதியில் சுமார் 4000 கட்டட மற்றும் வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
LMD சஞ்சிகை மற்றும் நீல்சன்ஸ் ஆய்வுகள் ஆகியன, இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய வர்த்தகக் தொகுப்பின் மாதாந்திர வெளியீட்டாளர்களாவர், இது ஆண்டுக்கான நிர்வகிப்பை வெளியிடுகிறது, 12 வௌ;வேறு துறைகளை உள்ளடக்கிய 800க்கும் அதிகமான வர்த்தகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் முகாமைத்துவம் மற்றும் தலைவர்களின் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் சிறப்பு, ஒருமைப்பாடு, புத்தாக்கம், சந்தையை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள், பெருநிறுவன கலாச்சாரம், பெருநிறுவன சமூக பொறுப்பு, பெருநிறுவன கண்ணோட்டம் மற்றும் நாட்டின் பொறுப்பு ஆகிய விடயங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றறமை குறிப்பிடத்தக்கது.

பிரைம் குழுமம்
இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றது. அத்துடன் தனியார் நிறுவன குழுமமாக இருந்த பிரைம் குழுமத்தில் சேவை மற்றும் முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் Prime Lands Residencies பொதுப் பங்கு விநியோகம் (IPO) மேற்கொள்ளப்பட்டதுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முடிவடைந்த இந்த பங்கு விநியோகத்தின் மூலம் குழுமத்தின் பங்குரிமை தொடர்பில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு சந்தர்பம் வழங்கியதனால் சர்வதேச தரத்திற்கு கட்டட விற்பனை நிறுவனமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *