தேரர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோரிக்கை!

அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று பீடாதிபதிகளை சந்தித்து ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடான முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென, முன்னாள் அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன், தலைமை பீடாதிபதிகளை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தம்மீது சுமத்தியுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

“இந்த இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் ஒழுக்கமற்ற மற்றும் சட்டவிரோதமான செயலைச் செய்துள்ளனர். உத்தியோகபூர்வ வாகனங்களில் சீருடையில் சென்று மூன்றாம் தரப்பினரிடம் சட்ட விடயங்களைப் பற்றி பேசியதும், பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெறாமையும் குற்றம்” என முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஜி.பி.கொடகதெனிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தாமை பிரச்சினைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *