தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறந்த குழந்தை!

பிரித்தானியாவில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று, பெற்ற தாயின் முகத்தை கூட பார்க்காமல், அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் சவப்பெட்டிக்கு பின்னால், நடப்பது அறியாமல் உறவினர் ஒருவரது கையில் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த பச்சிளம் குழந்தையின் புகைப்படம் இனையத்தில் வைரலாகி வருகிறது.
வடக்கு அயர்லாந்தில், லண்டன்டெர்ரியை சேர்ந்தவர் Samantha Willis (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் தடுப்பூசி போடாமல் இருந்ததால், கடந்த 16 நாட்களாக கோவிட் -19 தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரசவத்திற்காக Altnagelvin மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தா வில்லிஸ், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால், நோய்த்தொற்றின் காரணமாக அந்தக் குழந்தையை ஒரு முறை கூட கையில் வாங்கி பார்க்க முடியாமல், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலேயே காலமானார்.
அவரது இறுதி ஊரவலம் திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது சவப்பெட்டிக்கு பின்னால் அந்த குழந்தை இருக்கும் புகட்டப்படம் இணையத்தில் வைரலானது.

புதிதாக பிறந்த குழந்தைக்கு Eviegrace என பெயரிடப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து சமந்தாவிற்கு மொத்த 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தடுப்பூசி போடாத ஒரே காரணத்தால் நான்கு குழந்தைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் தனது மனைவிக்கு உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்திய சமந்தாவின் கணவர் ஜோஷ் வில்லிஸ், தடுப்பூசி பெறுமாறு மக்களை வலியுறுத்தினார்.