ஒரு துண்டு பீட்சா சாப்பிட்டால் 8 நிமிடங்கள் ஆயுள் குறையுமாம்!

மாறிவரும் வாழ்க்கை முறையால் மக்களின் உணவு மற்றும் பானங்கள் ஒரு நபரின் வாழ்க்கை தரத்தை குறைத்துள்ளது. அதிலும், பீட்சா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீட்சாவின் ஒரு துண்டை சாப்பிட்டால் ஒரு நபரின் ஆயுளை 7-8 நிமிடங்கள் குறையும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் உணவுப் பொருட்கள், மற்றும் வாழ்க்கை தரம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.

தி சன் அறிக்கையின் படி, பாதாம் சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையை 26 நிமிடங்கள் அதிகரிக்கிறது. தினமும் பாதாம் சாப்பிடுவது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். மேலும், கடலை வெண்ணெய் மற்றும் ஜாம், சாண்ட்விச்கள் ஆகியவை ஒரு நபரின் வயதை அரை மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிக்கிறது.

பின், வாழைப்பழம் சாப்பிடுவதால் ஆயுட்காலம் 13.5 நிமிடங்கள் அதிகரிக்கிறது, தக்காளி சாப்பிடுவதால் 3.5 நிமிடங்கள் அதிகரிக்கிறது. இது தவிர, சால்மன் மீன் சாப்பிடுவதால் 16 நிமிட ஆயுள் அதிகரிக்கிறதாம். ஒரு துண்டு பீட்சா சாப்பிடுவதன் மூலம் ஆயுளில் 8 நிமிடங்கள் குறைகிறது. குளிர்பானம் குடிப்பதன் மூலம் ஆயுளில் 12.04 நிமிடங்கள் குறைகிறது.

இது தவிர, பர்கர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை ஆயுட்காலத்தை பெரிய அளவில் குறைக்கின்றன. எனவே, அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நேச்சர் ஃபுட் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

வாழ்க்கை நாட்களில் உணவு மற்றும் பானத்தின் விளைவை அறிய, விஞ்ஞானிகள் பல வகையான உணவுப் பொருட்களில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மூலம், அமெரிக்காவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்ணும் மக்களின் சராசரி வயது 0.45 நிமிடங்கள் குறைந்து வருவதாகக் கூறுகிறது.

அதாவது, ஒரு ஹாட் டாக் சாண்ட்விச்சில் 61 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி இருந்தால், அதை சாப்பிடுவது ஒரு நபரின் வாழ்க்கையை 27 நிமிடங்கள் குறைக்கும். தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவுகள் சிறந்தவை.

சில நிபுணர்கள் கூட தாவர உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம், விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவு பொருட்களின் புரதத்தை விட சிறந்தது என தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *