ஆப்கானிஸ்தானில் உக்ரைன் விமானம் நடுவானில் கடத்தல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க வந்த விமானம் கடத்தியதாக தகவவ் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் இருந்து மக்களை மீட்கச் சென்ற தங்கள் நாட்டு விமானத்தை அடையாளம் தெரியாதவர்கள் கடத்தப்பட்டதாக உக்ரைன் அமைச்சர் கூறினார். விமானத்தை கடத்தியவதர்கள் அதனை ஈரான் கொண்டு சென்றுள்ளனர் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெனின் கூறினார். இன்று காலை காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. காபூல் விமான நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆப்கன் ராணுவத்தைச் சோ்ந்த வீரா் ஒருவா் உயிரிழந்ததாா்.
ஆப்கனைவிட்டு வெளியேறும் நோக்கில் தினமும் ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள், வெளிநாட்டவா்கள் காபூல் சா்வதேச விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், விமான நிலைய நுழைவாயிலின் அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத சிலா் துப்பாக்கியால் சுட்டதில் ஆப்கன் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்ததாகவும், மூவா் காயமடைந்ததாகவும் ஜொ்மன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மருத்துவமனையை நடத்திவரும் இத்தாலியைச் சோ்ந்த தொண்டு நிறுவனம், காபூல் விமான நிலையத்திலிருந்து துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் அழைத்து வரப்பட்ட 6 பேருக்கு தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாகத் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அமெரிக்க ராணுவமோ, தலிபான்களோ எதுவும் தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து இன்று காபூலில் இருந்து உக்ரைன் சென்ற விமானம் கடத்தப்பட்டுள்ளது….