அமைச்சரவை கூட்டத்தில் கொதித்தெழுந்த பிரதமர் மஹிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி ,நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளாத நிலையில் பிரதமரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக 3 வாரங்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை ஊடகத்திடம் வழங்கிய கட்சி தலைவர்களுக்கே மஹிந்த எச்சரிக்கை விடுத்ததோடு, அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

மேலும் நாட்டை மூட வேண்டாம் என அமைச்சரவையில் இணக்கம் வெளியிட்டு, வெளியே சென்று எதிர்ப்பு வெளியிடுவது பொருத்தமான செயல் அல்ல எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எதிர்க் கருத்து இருக்குமானால் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் அமைச்சரவையில் அதனை கூறியிருக்கலாம் எனவும் கடுமையாக பேசியுள்ளார்.

மேலும் ,ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது தவறு இல்லை என்றாலும் அதனை ஊடகங்களிடம் வழங்குவது தவறு என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு செயல்படுவதன் மூலம், அமைச்சரவையில் பேசுவதற்கு போதுமான ஜனநாயகம் இல்லை எனவும், அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் மக்கள் உணர்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *