பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தலிபான்!

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அமெரிக்கா அல்லது பிரித்தானியா நீட்டித்தால் எதிர்விளைவுகளை சந்திக்கக்கூடும் என தலிபான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து அமெரிக்கர்களும் ஆப்கானை விட்டு வெளியேற ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஜோ பைடன் கெடு விதித்துள்ளார், ஆனால் அனைவரையும் வெளியேற்ற மேலும் பதினைந்து நாட்கள் தேவை என்று பிரித்தானியா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மேற்கத்திய படைகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு நாட்டில் இருந்தால் எதிர்விளைவுகளை சந்திக்கக்கூடும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுஹைல் ஷாஹீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி பைடன் ஆகஸ்ட் 31-க்குள் அவர்கள் அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

எனவே எந்த அவசியமும் இல்லாத போது, அமெரிக்கா அல்லது பிரித்தானியா வெளியேற்றத்தைத் தொடர கூடுதல் நேரம் கேட்டால் தர மாட்டோம். அல்லது எதிர்விளைவுகளை சந்திக்கக்கூடும்.

இது எங்களுக்குள் அவநம்பிக்கையை உருவாக்கும். அவர்கள் படைகளை திரும்பப் பெறும் பணிகளை தொடர விரும்பினால் அது எதிர்வினையைத் தூண்டும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுஹைல் ஷாஹீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *