இளவரசர் ஹரி மற்றும் மனைவி மீது வழக்குத் தொடர மகாராணி உத்தரவு!

பிரித்தானிய ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மீது வழக்குத்தொடர்வது தொடர்பாக திட்டமிடுமாறு பிரித்தானிய மகாராணியார் உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ குடும்பத்தின் மீது ஹரியும் மேகனும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எரிச்சலடைந்துள்ள பிரித்தானிய மகாராணியார், இதுவரை பொறுத்துக்கொண்டது போதும், சட்டப்பூர்வமாக ஹரி மேகனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை துவங்குங்கள் என அரண்மனை மூத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

மேகனை ராஜ அரண்மனைக்குள் ஹரி அழைத்துக்கொண்டு வந்த நாளில் மேகனால் துவங்கிய தொல்லைகள், அவர்கள் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய பின்னரும் தொடர்ந்தவண்ணம் இருந்தன.

குறிப்பாக, ஓபரா பேட்டியில், உலகத்துக்கு முன்பாக வெளிப்படையாக ராஜ குடும்பத்தை அவமதித்தார்கள் ஹரியும் மேகனும். அதுவும், ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக அவர்கள் கூறிய குற்றச்சாட்டால் ராஜ குடும்பம் மட்டுமல்ல மக்களும் அதிர்ச்சியடைந்தார்கள். அப்போதும், மகாராணியார் தன் பேரன் ஹரி மீது அன்பைப் பொழிந்தவண்ணமே இருந்தார். ஹரிக்கு இரண்டாவது மகள் பிறந்தபோது, ராஜ குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு ஹரி மேகன் தம்பதியருக்கு வாழ்த்துச் சொன்னது.

ஆனால், ஹரியும் மேகனும் இன்னமும் மாறியதுபோல் தெரியவில்லை.

ஆம், ஹரியும் மேகனும் Finding Freedom என்ற பெயரில் தங்கள் சுயசரிதையை அடுத்த ஆண்டு புத்தகமாக வெளியிட உள்ளார்கள். அந்த புத்தகத்தில் தற்போது கூடுதலாக ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதில், தங்கள் மகனது நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் இனவெறுப்பு தாக்குதல் நடத்தியதைக் குறித்து தாங்கள் புகாரளித்தபோது, மகாராணியார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இந்த தகவலைக் கேள்விப்பட்ட மகாராணியார், இதுவரை பொறுத்தது போதும், சட்ட ரீதியாக ஹரி மேகன் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுங்கள் என அரண்மனை மூத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

அத்துடன், ஹரி மேகனின் புத்தகத்தை வெளியிட இருக்கும் நிறுவனத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளதாம்.

அதாவது, அந்த புத்தகத்தில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டு, நேரடியாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தால், அது அவதூறாகவும், அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையின் உரிமைகளை மீறிய செயலாகவும் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *