இளவரசர் சார்ள்ஸ் தந்தை பிலிப்புக்கும் இடையே நெருக்கமான உறவில் இருந்த மர்மப் பெண்!

பிரித்தானிய இளவரசர் பிலிப் இறந்தபோது, அவரது இறுதிச்சடங்கில் ராஜ குடும்பத்தைச் சேராத ஒரே ஒரு பெண் மட்டும் கலந்துகொண்டார்.

அந்த பெண் இளவரசர் சார்லஸுக்கு நண்பராக இருந்த நிலையில், தன் தந்தையான இளவரசர் பிலிப்புக்கும் அந்த பெண்ணுக்கும் தவறான உறவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், அந்த பெண்ணுடனான நட்பையே முறித்துக்கொண்டாராம் சார்லஸ்.

மகாராணியாரோ அந்த விடயத்தைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இளவரசர் பிலிப் எந்த பெண்ணைக் கண்டாலும் அசடு வழிவாராம். அதைக் குறித்து மகாராணியாரே கிண்டல் செய்ததுண்டு. அப்படியிருக்கும் நிலையில், இந்த பெண்ணை அவர் கண்டுகொள்ளாமல் விட்டது அதே காரணத்துக்காகத்தானா என்பது தெரியவில்லை.

அந்த பெண்ணின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இளவரசர் பிலிப் நடனமாடும் காட்சியைக் கண்டவர்கள், இருவருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருக்கலாம் என கிசுகிசுத்ததும் உண்டாம்.

இது குறித்து கேட்டபோது, நான் எந்த பெண்ணுடன் பேசினாலும், அவருடன் நான் படுக்கைக்கு சென்றுவிட்டதாகவே ஒவ்வொரு முறையும் கூறுகிறார்கள், இது அவர்களது கற்பனை என்று கூறியுள்ளார் இளவரசர் பிலிப்.

அப்படிப்பட்ட அந்த மர்மப்பெண் யார்?

Penelope Eastwood என்று அறியப்பட்ட அந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும்போது அவரை முதன்முதலாக சந்தித்திருக்கிறார் இளவரசர் பிலிப். மவுண்ட்பேட்டன் பிரபுவின் பேரனும், இளவரசர் பிலிப்பின் ஞானப் புதல்வனுமான Norton Knatchbull என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பென்னி என்னும் Penelope.

1991ஆம் ஆண்டு, பென்னியின் மகளான Leonora ஐந்து வயதாக இருக்கும்போது சிறுநீரகப் புற்றுநோயால் உயிரிழக்க, அப்போதிருந்து பென்னியைக் கரிசனையுடன் கவனித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் பிலிப்.

சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றவரும், பிலிப்பைப் போலவே நகைச்சுவை உணர்வுகொண்டவருமான பென்னியுடன் பிலிப் சேர்ந்து சுற்றத்தொடங்க, அப்போதுதான், உன் தந்தைக்கும் உன் தோழி பென்னிக்கும் தவறான உறவு இருக்கிறது என நண்பர்கள் இளவரசர் சார்லசிடம் கூற, அத்துடன் பென்னியுடனான நட்பை முறித்துக்கொண்டிருக்கிறார் சார்லஸ்.

பென்னியின் கணவர் மூன்று குழந்தைகளுடன் ஒரு நாள் அவரை விட்டு விட்டு ஜீன்னி என்ற ஃபேஷன் டிசைனருடன் ஓட, மகன் போதைக்கு அடிமையாக, ராஜ குடும்பத்தாரின் பரிவும் பாசமும் பென்னிக்கு கிடைத்துள்ளது.

இப்படியே அவர்களுக்கிடையிலான நட்பு கடைசி வரை தொடர்ந்த நிலையில், பிலிப் தன் கடைசி நாட்களை செலவிட்ட Sandringham எஸ்டேட் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட ராஜ குடும்ப உறுப்பினரல்லாத வெகு சிலரில் பென்னியும் ஒருவராம்.

அத்துடன், பிலிப் இறந்தபோது, அவருக்கு நெருக்கமானவர்கள் கூட கொரோனாவைக் காரணம் காட்டி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், பென்னி மட்டும் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *