எங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது கதறி அழுத ஆப்கான் இராணுவ வீராங்கனை!

அமெரிக்க ராணுவத்தினரால் பயிற்சி பெற்ற பெண் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் தமது சீருடையை தீயிட்டு கொளுத்திவிட்டு கதறிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாலிபான்கள் ஆட்சியில் வாழ்வது என்பது கொடூரமானது என குறிப்பிட்டுள்ள அவர், எங்கள் வாழ்க்கை முடிந்தது என கதறியுள்ளார்.

33 வயதான Kubra Behroz என்பவரே தமது ராணுவ சீருடையை தீயிட்டு கொளுத்திவிட்டு, வாழ்க்கை முடிந்தது என கதறியவர். 2011ல் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் இணைந்துள்ள இவர், அமெரிக்க ராணுவத்தால் பயிற்சியும் பெற்றுள்ளார்.

தற்போது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் காபூல் நகரில் வசித்து வருகிறார். திங்களன்று Kubra Behroz தமது ராணுவ சீருடையை தீயிட்டு கொளுத்தியவர், பெண் பொலிஸ் ஒருவரை தாலிபான்கள் படுகொலை செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் பாராளுமன்றத்தை கைப்பற்றியுள்ளனர், எங்கள் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என Kubra Behroz தமது சீருடையை கொளுத்திவிட்டு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும், நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பவர்கள் பட்டியலில் தாம் இருப்பதாகவும், ஆனால் விமான சேவைகள் இல்லை எனவும், விமான நிலையமும் மக்கள் கூட்டத்தால் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாட்டைவிட்டு வெளியேற கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கான் ராணுவத்தினரை பொறுத்தமட்டில் கல்வியறிவு இல்லாதவர்கள், பல் துலக்கவும் தெரியாதவர்கள் என உண்மை நிலையை Kubra Behroz வெளிப்படுத்தியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *