வாலிபரின் முதலிரவை வீடியோ எடுத்து பணம், நகை பறித்த கும்பல்!

கேரளாவில் வாலிபரின் முதலிரவை வீடியோ எடுத்து பணம் மற்றும் நகையை பறித்த இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் உம்மர் (வயது 41). இவரது மனைவி பாத்திமா (40).இவர்களின் மகள் சஜிதா (30).
சஜிதாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த கொச்சியை சேர்ந்த அப்துல் சத்தார் என்பவர் உம்மர்- பாத்திமா தம்பதியை தொடர்பு கொண்டு திருமணம் குறித்து பேசினார். பேச்சுவார்த்தையில் சஜிதாவை திருமணம் செய்து கொடுக்க அவர்கள் முன் வந்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு சஜிதாவுக்கும் அப்துல் சத்தாருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் காசர்கோடு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

சில நாட்கள் கடந்த நிலையில் அப்துல் சத்தாரை தொடர்பு கொண்ட பாத்திமா-உம்மர் இருவரும் அவரின் முதலிரவு காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இருப்பதாக கூறினர். மேலும் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் மற்றும் நகைகளை தரவேண்டும் என்று கூறி மிரட்டினர். முதலில் மாமனார் – மாமியார் விளையாட்டுக்கு கூறிவதாக நினைத்த அப்துல் சத்தார் பின்னர் அவர்கள் உண்மையாக மிரட்டுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

மிரட்டலுக்கு பயந்த அவர், தன்னிடமிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் பணத்தை கொடுத்தார். அதன்பின்னரும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர். இதனால் அவர் காஞ்சிரபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில், உம்மர்-பாத்திமா தம்பதியினர் இதுபோன்று பலரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. சஜிதாவை மகள் என்று ஏமாற்றி அவருக்கு போலியாக திருமணம் செய்து வைப்பார்கள். பின்னர் முதலிரவு நடக்கும் அறையில் கேமிராவை மறைத்து வைத்து அதனை படம் பிடிப்பார்கள். அதனை காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டல் விடுப்பார்கள்.

இப்படி பலரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். அவர்களுக்கு சஜிதா உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து உம்மர்- பாத்திமா தம்பதியினர் மற்றும் சஜிதா, இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னொருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, பாத்திமா, உம்மர் ஆகிய இருவரும் இதுபோல பலரை மிரட்டி பணம் பறித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு சஜிதா உடந்தையாக இருந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன. மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பின்னரே இந்த கும்பல் எத்தனை பேரை ஏமாற்றினார்கள் என்ற விவரம் தெரியவரும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *