மருந்தின் பக்கவிளைவால் உருவம் மாறிய 4 மாத குழந்தை!

அமெரிக்காவில் நான்கு மாத குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து செலுத்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட பக்கவிளைவால் உடல் முழுவதும் முடி வளர்ந்து வருகின்றது.அமெரிக்கா நகரில் உள்ள Texas பகுதியை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு கை, கால், இடுப்பு என எல்லா இடங்களிலும் முடி வளர்ந்து வருகின்றது. குழந்தைக்கு பிறக்கும் பொழுதே Congenital Hyperinsulinism என்ற நோய் இருந்துள்ளது.

இதனால் மேட்டியோ டெக்சாஸ் என்ற மருத்துவமனையில் குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து செலுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இரண்டு வாரங்களில் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் லேசாக முடி வளர தொடங்கியுள்ளது.அது நாளடைவில் குழந்தையின் கால், கை என அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *