புதிய தொழிலை ஆரம்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது.

திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.    

திரையுலகில் கொடிகட்டி பறந்தாலும் கீர்த்தி சுரேஷ் சைடு கேப்பில் புது பிசினஸ் ஒன்றையும் கையில் எடுத்துள்ளாராம்.

பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருப்பது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதில் கடந்த 4 மாதங்களாக தனது டீம் உடன் இயற்கையான அழகு சாதன பொருட்களை உருவாக்க உழைத்து வந்ததாகவும், ரோஸ், சந்தனம், ஏலக்காய், குங்குமப்பூ போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூமித்ரா அழகு சாதன பொருட்கள் அனைத்துமே கெமிக்கல் மற்றும் தேவையில்லாத வேஸ்ட் இல்லாத, சுத்தமான ஆர்கானிக் பொருட்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *