குஷ்புவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் கேட்ட ரசிகன்!

90 -களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
விரைவில் குஷ்புவிற்கு பாஜக தலைமை மிக முக்கிய பொறுப்பை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இணையத்தளங்களில ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த புகைப்படத்தில் படு ஸ்லிமாக மாறி 20 வயது பெண் போல் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, பலரும் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்கிறீர்களா? மேடம் என கேட்டுள்ளார்.

அதற்கு குஷ்பு, மன்னிக்கவும், ரொம்ப தாமதம்… 21 வருடங்கள் தாமதமாகிவிட்டது.. ஆனாலும் என் கணவர்கிட்ட கேட்டு சொல்கிறேன் என நக்கலாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *