செயற்கை நுண்ணறிவு மூலம் கொரோனா தடுப்பு மருந்து!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல நாடுகளில் பரவிவரும் நிலையில் தடுப்பு மருந்து வினியோகம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் செயற்கை நுண்ணறிவு மூலமாக வைரஸ் தாக்கத்துக்கு தீர்வு ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே அமெரிக்காவின் புரோசீடிங்ஸ் மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளியின் உடல் உயிரியை 1400 மருந்து மற்றும் மூலக்கூறு தொடர்கள் மூலமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் உதவியுடன் குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோனதன் செக்ஸ்டன்ட் என்ற உதவி பேராசிரியர், வீரியமிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 10 ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனால் தற்போது உள்ள நிலையில் அது சாத்தியமற்றது.

நோயாளியின் நுரையீரலில் இருந்து ஸ்டெம்செல் ஒன்று எடுக்கப்பட்டு அதில் 17 வித மூலக்கூறுகள் செலுத்தப்பட்டன. இவற்றுள் தாய்ப் பாலில் காணப்படும் லேக்டோஃபெரின் உள்ளிட்ட 9 மூலக்கூறுகள் கொரோனா தாக்கத்தை எதிர்த்துப் போராடியது தெரியவந்தது.

வீரியமிக்க தடுப்பு மருந்துக்கு தற்போது உலக விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பு மருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *