தச்சு தொழிலாளியாக மாறிய அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர், தச்சராக
மாறியிருக்கிறார்.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராகவோ, பயிற்சியாளராகவோ அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுபவர்களாகவோ மாறுவது வழக்கம். சிலர் கிரிக்கெட்டை அப்படியே விட்டு விட்டு, இசைக் கலைஞர்களாக, நடிகர்களாக மாறியிருக்கின்றனர்.

அந்த வழியில் தச்சராக மாறியிருக்கிறார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சேவியர் டோஹர்டி (Xavier Doherty). இவர், 2015 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டி கள், 60 ஒரு நாள் போட்டிகள், 11 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இணைந்த சேவியர், 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பிறகு 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தச்சராக முடிவு செய்தார். ஆனால், அதுபற்றி அவருக்கு ஏதும் தெரியாது. பிறகு அதை முழுமையாகக் கற்றுக்கொண்டு இப்போது அந்தத் தொழிலில் இறங்கிவிட்டார்.

’கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் என்ன செய்ய போகிறேன் என்பது தெரியாமல் இருந்தேன். இப்போது இந்த தொழிலை ரசித்து செய்கிறேன். இது எனக்கு பிடித்திருக்கிறது. புதிதுதாக கற்றுக்கொள்ள முடிகிறது’ என்று கூறியிருக்கிறார் சேவிய டோஹர்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *