மெஸ்ஸி அழுது துடைச்சு போட்ட டிஸ்பூ பேப்பரால் கோடீஸ்வரர் ஆன நபர்!

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பாவான் மெஸ்ஸி அழுது போட்ட டிஸ்யூ பேப்பரை ஒரு நபர் 19 கோடிக்கு மேல் ஏலம் விட்டுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

பார்சிலோனா அணியில் இருந்து விலகிய பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பிரான்சைச் சேர்ந்தParis Saint Germain (PSG)அணிக்காக விளையாட உள்ளார்.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் பார்சிலோனா ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இணையத்தில் தங்கள் கருத்துக்களை இப்போது வரை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 21 ஆண்டுகளா பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸி, அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்தது மட்டுமல்லாமல், 6 முறை balan de or விருதையும் வென்றுள்ளார்.

இந்நிலையில், மெஸ்ஸியின் சம்பளம் அதிகமாக இருப்பதால், பார்சிலோனா அணியால் அதனை கொடுத்து சமாளிக்க முடியவில்லை இதன் காரணமாக, 21 ஆண்டுகளாக விளையாடின பார்சிலோனா அணியில் இருந்து, மெஸ்ஸி கண்ணீர் மல்க விடைபெற்றார் .

அப்போது அவர் பேசிய போது, Good Bye சொல்லும் சூழல் வரும் என நினைக்கவில்லை. என்னால் முடிந்த அனைத்தையும் இந்த அணிக்காக தொடக்கம் முதலே கொடுத்து வந்தேன்.

என் வாழ்வின் மிகக் கடினமான கட்டம் இது. பேசுவதற்கு வேறு சொற்கள் ஏதும் வரவில்லை. எல்லோருக்கும் நன்றி எனக் கூறி டிஸ்யூ பேப்பரால் தனது கண்ணீரை துடைத்து போட்டார்.

தற்போது அவர் துடைத்து போட்ட அந்த டிஸ்யூ பேப்பர், ஒரு மில்லியன் டொலருக்கு (இலங்கை மதிப்பில் 19,95,82,900 கோடி ரூபாய்) ஏலம் விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *