கொரோனாவால் உயிரிழந்த நபர் திடீரென உயிர் பிழைத்த அதிசயம்!

குருநாகல் பிரதேசத்தில் திடீரென வீதியில் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக எண்ணி குருநாகல் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் திடீரென உயிர் பிழைத்து வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற சென்றுள்ளார்.
குருநாகல், யத்தம்பாலவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடை இளைஞன் ஒருவனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
அதிக போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த இந்த இளைஞன் குருநாகல் வில்கொட வீதியில் மரத்திற்கு கீழ் விழுந்து கிடந்த நிலையில் பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த இளைஞனுக்கு அருகில் செல்லும் போது உயிரிழந்தவர்கள் மீது காணப்படுவது போது ஈக்கள் மக்கள் எறும்புகள் அவர் முகத்தில் நிறைந்து காணப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையில் இந்த நபர் கொவிட் தொற்றினால் உயிரிழந்து கிடப்பதாக பிரதேச மக்கள் நம்பியுள்ளனர். கொவிட் அச்சம் காரணமாக அவரை நெருங்க முயற்சிக்காத மக்கள் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக அம்பியுலன்ஸ் ஊடாக குருநாகல் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சில நிமிடங்களில் அவருக்கு சுயநினைவு வந்துள்ளது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.