புர்கா அணியாத பெண்கள் மீது தலிபான் படையினர் துப்பாக்கிச் சூடு!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானில் இனி சண்டை நடக்காது, அமைதி நிலவும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையம் அருகே புர்கா அணியாத பெண்கள் மீது தாலிபான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதனிடையே ஜலாலாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாலிபான்கள் தங்கள் கொடியை அரசு அலுவலங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆப்கன் தேசிய கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினர்.அப்போது தாலிபான்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர்….