தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றொரு பிரபல நடிகைக்கும் கொரோனா!

பிரபல நடிகை ஷெரின் சமீபத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும், தனக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்றே தெரியவில்லை என அதிர்ச்சி கொடுத்தார். இவரை தொடர்ந்து, மற்றொரு பிரபல நடிகையும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை ஷெரின் சமீபத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும், தனக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்றே தெரியவில்லை என அதிர்ச்சி கொடுத்தார். இவரை தொடர்ந்து, மற்றொரு பிரபல நடிகையும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. ரஜினி, கமல், சிவகுமார், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், அப்போதைய ட்ரெண்ட் செட்டர் நடிகையாகவும் இருந்தவர், தற்போது வரை இவரது பெயரில் நதியா கம்மல், நதியா கொண்டை, என தனித்துவம் வாய்ந்த விஷயங்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகிய நதியா, மீண்டும் சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

நடிகை நதியா நடிக்க துவங்கியதில் இருந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம், இருந்தாலும் தனக்கு பிடித்த மற்றும் பொருத்தமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிக்க படக்குழுவினர் அவருக்கு போன் செய்தபோதுதான் நடிகை நதியாவிற்கு கொரோனா இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது

நதியா மட்டும் இன்றி, மும்பையில் அவருடன் வசித்து வரும் அவரது அம்மா, அப்பா, மற்றும் அவரது வீட்டில் பணிபுரியும் நான்கு பேருக்கு ஒரு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நடிகை நதியா இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த பிறகும், தனக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என தெரியவில்லை என வருத்தத்தில் பேசியுள்ளார்.  இதையடுத்து படக்குழுவினர் நதியா நடிக்கும் காட்சிகளை தவிர்த்து மற்ற காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *