கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்து பாம்பை தரிசித்த பெண் உயிரிழப்பு!

கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்து பாம்பை தரிசித்த பெண் அந்த பாம்பிடம் கடிவாங்கி உயிரிழந்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற பெண் வழியில் பாம்பு ஒன்றை பார்த்துள்ளார். அதைக்  கண்டவுடன் அந்த பெண் அந்த பாம்பை கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்து அந்த பாம்பிற்கு தீப ஆராதனை காட்டி அதை எடுத்து மாலை போல் கழுத்தில் சுற்றிக்கொண்டுள்ளார். 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சாமி பாடல்கள் பாடி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடியுள்ளனர். ஓரமாக சென்றுகொண்டிருந்த பாம்பை எடுத்து கழுத்தில் சுற்றி நடனம் ஆடியதால் ஆவேசமடைந்த அந்த பாம்பு அப்பெண்ணை கொத்தியுள்ளது. 

அந்த பாம்பின் விஷம் உடலில் பரவியதனால் அப்பெண் மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அந்தப்பெண்ணை அந்த கிராம மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அந்த கிராமத்தின் மந்திரவாதியிடம்  அழைத்துச் சென்றுள்ளனர். அச்சமயத்தில் அந்த மந்திரவாதி கிராமத்தில் இல்லாத காரணத்தினால் அப்பெண் உடல் முழுக்க விஷம் ஏறி உயிரை விட்டுள்ளார். அதன்பின் அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *