ஒரு வாரகாலமாவது நாட்டை முடக்குங்கள் மகாநாயக்கர்கள் அவசர கோரிக்கை!


கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்றுகள் பரவியுள்ள நிலையில், நாட்டை ஒரு வாரகாலமாவது முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சுகாதார பிரிவினர்களின் கருத்துக்களை பரிசீலித்து
உடனடியாக முடக்கத்தை அமுல்படுத்துமாறும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.