இலங்கை தலிபான்களின் ஆட்சியை ஆதரிக்குமா?

ஆப்கானில் தலிபான்களின் ஆட்சியை ஏற்றுக்கொள்வதா என்பது குறித்து இலங்கை இன்னமும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தீர்மானிக்குமாறு வெளிவிவகார அமைச்சினை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என தெரிவித்துள்ள அமைச்சர் தலிபான் தலைமையில் ஆப்கானில் அமையவுள்ள அரசாங்கம் குறித்து ஆராய்ந்து வெளிவிவகார அமைச்சு தனது நிலைப்பாட்டை வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

ஆப்கான் மக்கள் பெருமளவில் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் இது குறித்து கவலையடைந்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *