ஆசிய சாதனைப் புத்தகத்தில் பெயரை பதிவுசெய்த இலங்கை சிறுமி!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த MLM.ஜெஸீம் U.K.பாத்திமா ஜவ்ஹறா தம்பதிகளின் செல்வ புதல்வி MJ.பாத்திமா அனத் ஜிதாஹ் Grandmaster மகுடத்தையும், ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் “Fastest to Identify Flags of all Asian Countries” என்ற பட்டத்தையும் வென்று இலங்கை நாட்டுக்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளையும் மிக வேகமாக அடையாளம் கண்ட முதல் ஆசிய சிறுமி எனும் மகுடத்தை பெற்றுள்ளார்.

3.12.2016 இல் பிறந்த இவர், தனது 4 வயதில் அனைத்து 48 ஆசிய நாடுகளின் கொடிகளையும் வெறும் 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டு ஆசியா சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதித்துள்ளார்.

சிறு வயதிலேயே சிறந்த ஞாபக சக்தியும் பல திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர் ஆங்கிலத்தை சரளமாக வாசிக்க எழுத பேச தெரிவதுடன், கணிதம் உள்ளிட்ட பாடங்களிலும் மிக தேர்ச்சியாக திகழ்கின்றார்.
தரம் 4 படிக்கின்ற தகுதி இவருக்குல் இருப்பதாக தனது பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *