தலிபான் அமைப்பை உருவாக்கியர் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்!

தாலிபான் அமைப்பை உருவாக்கிய 4 பேரில் ஒருவரான முல்லா அப்துல் கனி பராதர், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியதாக தாலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காந்தகர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். அதில் தாலிபான் அமைப்பின் மூத்த தலைவரும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் ராணுவ விமானத்தில் இருந்து இறங்கும் காட்சிகளும் அவரை தாலிபான்கள் வரவேற்று முழக்கமிட்டபடி அழைத்து செல்லும் காட்சிகளும் உள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தாலிபான்கள்,’10 ஆண்டுகளுக்கு பிறகு கத்தாரில் இருந்து அப்துல் கனி சொந்த மாகாணமான காந்தகாருக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் தாலிபான்களின் புதிய அரசாங்கத்தில் தேர்வு பட்டியலில் பராதர் பெயர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.10 ஆண்டுகளுக்கு பிறகு பராதார் காந்தகாருக்கு திரும்பிய நிலையில்,புதிய அரசு குறித்தும் அமைச்சரவையின் விவரங்கள் குறித்தும் தாலிபான்கள் எந்த நிமிடமும் அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
…