கோயிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகர்க்கு விளக்கமறியல்!

கோயிலுக்குள் வைத்து 15 வயது சிறுமியை இரண்டு தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அர்ச்சகர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

குளியாப்பிட்டிய, போஹிங்கமுவ பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றிலேயே இந்த சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது

ஆலய அர்ச்சகரான ராமச்சந்திரன் ஜெயராமன் மந்திர தந்திர வேலைகளிலும் உள்ளூரில் பிரபலமானவராக இருந்து வந்தார். இந்நிலையில் 15 வயதான மகள் இளைஞன் ஒருவனை காதலிக்க ஆரம்பித்தால் கவலை அடைந்த பெற்றார் அந்தக் காதலை மந்திர தந்திரம் மூலம் பிரிப்பதற்காக குறித்த ஆலயத்திற்கு மகளை அழைத்துச் சென்றிருந்தார்

சிறுமியை ஆலயத்திற்குள் தனியாக அழைத்துச் சென்ற அர்ச்சகர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதுடன் காற்சட்டை அணிந்து கொண்டு சென்று இருந்த சிறுமியை மறுநாள் சட்டை அணிந்து வருமாறு கூறியுள்ளார்

மறுநாள் சட்டை அணிந்து சென்ற சிறுமியை இரண்டாவது தடவையாகவும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன் மூன்றாவது நாளும் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் எனினும் மறுநாள் ஆலயத்துக்குச் செல்ல சிறுமி மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து தனது மகளின் கல்விக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து காதலனுக்கு எதிராக பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இச் சிறுமி ஆலயத்திற்குள் வைத்து அர்ச்சகரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டமை தெரியவந்துள்ளது

விடயம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஆலயத்தை பூட்டி வைத்து விட்டு தலைமறைவான அர்ச்சகரை தேடி பொலிசார் வலை விரித்ததுடன் அர்ச்சகரை கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *