ஆப்கானிஸ்தானில் உள்ள பொக்கிஷங்களை குறிவைக்கும் சீனா!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு முதல் நாடாக சீனா ஆதரவு தெரிவித்தது. உலகநாடுகளே இந்த சம்பவத்தை உற்று கவனித்துக் கொண்டிருந்த போது, சீனா சற்றும் யோசிக்காமல் ஆதரவு தெரிவித்தது.

சீனாவின் இந்த ஆதரவிற்கு மிகப் பெரிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகியிருக்கும் செய்தியில், ஆப்கானிஸ்தான் மண்ணில், Rare earth material எனப்படும் அரிய தனிமங்கள், கனிமங்கள் உள்ளது.

இதைக் கைப்பற்றுவதற்கான திட்டத்தில் சீனா இறங்கி உள்ளது. உலகின் ஒரே சூப்பர் பவர் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேகமாக உழைத்து வரும் சீனாவிற்கு தாலிபான்களின் இந்த வெற்றி அல்வா துண்டு போல வந்து மாட்டி இருக்கிறது.

சர்வதேச மார்க்கெட் உலகில் கோலோச்சி வரும் நிறுவனங்களில் ஒன்றான AllianceBernstein நிறுவனத்தின் இயக்குனர் ஷமைலா கான்தான் சீனாவின் இந்த திட்டம் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

உலக நாடுகளை, முக்கியமாக ஆசிய நாடுகளை எல்லாம் Belt and Road Initiative என்ற திட்டம் மூலம் இணைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக சீனா முயன்று வருகிறது.

இதற்கு ஆசிய நாடுகள் பல ஒப்புக்கொண்டு சீனாவிற்கு வழிவிட்டு உள்ளது. இருப்பினும், இந்தியா இன்னும் இதை ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தது.

இப்படிபட்ட சூழ்நிலையில்தான் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதியை மாற்றும் எண்ணத்தில் தாலிபான் இருப்பதால் கண்டிப்பாக சீனாவின் Belt and Road Initiative திட்டத்தை தாலிபான் அமைப்பு வரும் நாட்களில் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபான்கள் வெற்றியால் கண்டிப்பாக சீனாவின் Belt and Road Initiative பிரச்சனை சரியாகிவிட்டது. அதோடு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை விரும்பாத தாலிபான் கண்டிப்பாக தங்கள் நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவை அனுமதிக்கும்.

பாகிஸ்தான், ரஷ்யா நட்பு உள்ளிட்ட பல காரணங்களால் சீனாவை தாலிபான்கள் கண்டிப்பாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கும் என்றே கூறப்படுகிறது.

இதனால் சீனா மிகப் பெரிய லாபம் அடையப்போகிறது. ஆப்கானிஸ்தான் மண்ணில் புதைந்து கிடைக்கும் பொக்கிஷமான பல்வேறு கனிமங்கள், தனிமங்களை தாலிபான்கள் உதவியோடு சீனா எடுக்கும்.

இந்த மார்க்கெட்டை சீனாதான் பிடிக்க போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Belt and Road Initiative புரொஜெக்ட்டை விட இந்த கனிம திட்டத்தில்தான் சீனா அதிகம் கவனம் செலுத்தும் என்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரிதான தனிமங்கள் மற்றும் கனிமங்களின் மொத்த மதிப்பு மட்டும் 2020 மதிப்பீட்டின்படி 3 டிரில்லியன் டொலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அரிதான கனிமங்களை கைப்பற்றவே சீனா முயன்று வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் செய்ய செலவிட்ட மொத்த தொகை 3 டிரில்லியன் டாலர். அந்த மொத்த தொகைக்கும் அதிகமான பொக்கிஷம் ஆப்கானிஸ்தான் நாட்டு மண்ணுக்கு உள்ளே இருக்கிறது.

இத்தனை நாட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கா இதை எடுத்து பிஸ்னஸ் பார்க்க தவறிய நிலையில் சீனா இதை கைப்பற்ற களமிறங்கி உள்ளது.

அலுமினியம், லாண்டம், செரியம், நியோடைமியம், தங்கம், சில்வர், சிங்க், மெர்குரி, லித்தியம் என்று பல அரிதான கனிமங்கள் உள்ளே இருக்கின்றன. போன் தயாரிப்பு, வாகன தயாரிப்பு தொடங்கி விமானம், சாட்டிலைட் தயாரிப்பு வரை அனைத்திற்கும் பயன்படும் அரிதான கனிமங்கள் ஆப்கான் உள்ளே புதைந்து கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்த பொக்கிஷத்தை எடுக்கும் திட்டத்தில்தான் தாலிபான்களுக்கு சீனா ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது. தாலிபான்களுக்கும், புதிய ஆப்கான் அரசுக்கும் பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் உதவ வேண்டும் என்றால் எங்களுக்கு இந்த கனிம திட்டங்களை கொடுக்க வேண்டும்.

எங்களை உங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு வரும் நாட்களில் சீனா செக் வைக்கும்.

பாகிஸ்தான், இலங்கையில் கட்டுமான வசதியை ஏற்படுத்துவதாக உள்ளே சென்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை சீனா கட்டுப்படுத்துவது போல ஆப்கானிஸ்தானும் சீனா வசம் செல்ல வாய்ப்புள்ளது என்று உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *