துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டும் நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தற்போது துப்பாக்கிச் சுடுதலில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணி நடந்து வருகிறது. சில காட்சிகள் ரஷ்யாவில் விரைவில் படமாக்கப்பட உள்ளன.

இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சென்னை துப்பாக்கிச் சுடுதல் கிளப்புக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த ஆண்டில் நடந்த 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு 6 பதக்கம் வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மாநில அளவிலான வெற்றிக்குப் பிறகு, செப்டம்பரில் நடக்க உள்ள தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக, தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *