பில்லா 2’ நான் உருவாக்கிய கதை அல்ல மனம் திறந்த இயக்குனர்!

தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் முதல் முறையாக பாலிவுட்டில் [இந்தி] சேர்ஷா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், பில்லா 2 படத்தின் கதை குறித்து இயக்குனர் விஷ்ணு வர்தன் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பில்லா’ மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அந்தப் படத்தின் ரீமேக்கான ‘பில்லா’ 2007 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தின் நாயகனாக அஜித் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது இந்தப் படம்.

அதைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு பில்லா 2 வெளியானது. விஷ்ணு வர்தன் படங்களில் பிசியாக இருந்ததால் சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கினார்

இந்தப் படத்தைப் பார்க்கும் போது ‘பில்லா 2’ வைப் போன்றே நானும் ‘பில்லா 2’ படத்துக்காக அந்தக் கதாபாத்திரத்தின் முன்கதையை யோசித்து வைத்திருந்தேன்.

ஆனால், நான் வேறொரு வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்து வைத்திருந்தேன்.

நான் அதை அணுகியதும் அப்படித்தான். அப்போது நான் அதை அறிவித்தபோது பாலிவுட்டில் ‘டான் 2’ அறிவிக்கப்பட்டதே அதைப் போலத்தான் இருக்கும் என்று நினைத்தார்கள்.

அந்த நேரத்தில் ‘டான் 2’ படத்தின் இயக்குநர் ஃபர்ஹானுடன் நான் தொலைபேசியில் பேசினேன்.

ஜகதீஷ் கதாபாத்திரம் யார், பிரபு கதாபாத்திரத்துக்கும் பில்லா கதாபாத்திரத்துக்கும் ஏற்கெனவே இருந்த பரிச்சயம் என்ன, பிரபு எப்படி இவரைத் துரத்த ஆரம்பித்தார்.

இருவருக்குமான உறவு என்ன, பில்லா என்கிற அந்தச் சின்னம் எப்படி வடிவம் பெற்றது, பில்லாவுக்கு ஏன் பெண்கள் மீது நம்பிக்கை கிடையாது, இப்படிப் பல கேள்விகளை வைத்துதான் பில்லா 2 கதையை எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் அப்போது நான் திரைக்கதையை முழுமையாக முடிக்கவில்லை. அதனால் தான் என் கதையை அவர்களுக்குத் தர இயலவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆனபோதும் தற்போது இவர் கூறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *