கொவிட் தொற்று காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுண்ணறிவு திறன் குறைவு!

கொரோனாவால் மக்கள் பொருளாதாரா ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுண்ண‌றிவு திறன் குறைவு ஏற்பட்டுள்ளதாக‌ அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா தொற்று காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், அதற்கு முன்பாக பிறந்த குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளிடம் சாமர்த்தியமாக‌ பேசும் திறன், நுண்ணறிவு என‌ ஒட்டு மொத்த அறிவாற்றல் செயல் திறனில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் ரோட் தீவு மாகாணத்தை சேர்ந்த 672 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  இவர்களில் ஜூலை 2020க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் 188 பேர், 308 பேர் ஜனவரி 2019க்கு முன் பிறந்தவர்கள், 176 பேர் ஜனவரி 2019 முதல் மார்ச் 2020 வரை பிறந்தவர்கள் ஆவார்கள். குழந்தைகளின் சிறப்பான அறிவாற்றல் வளர்ச்சிக்கு பிறந்ததில் இருந்து முதல் சில ஆண்டுகள் மிக முக்கியமானது. ஆனால், கொரோனா காலமான இந்த நேரத்தில் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட‌ மன அழுத்தம் காரணமாக, குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாதது, வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல முடியாதது.

வெளி உலக தொடர்பு குறைவு, விளையாட்டு நிகழ்வுகள் குறைவு , நிதி பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் இந்த குழந்தைகள் செயல் திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிரவுன் பல்கலைக் கழகத்தின் குழந்தைகள் மருத்துவத்திற்கான பேராசிரியர் சியான் டியோனி தெரிவித்துள்ளார். ‘கட்டிடத்திற்கு அடித்தளம் எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளில் அவர்களை சிறப்பாக பராமரிப்பது, அவர்களின் செயல்திறனை அதிகப்படுத்தும். மற்ற குழந்தைகளை விட சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் குழந்தைகள், அறிவுத் திறன் குறைவால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்,’ என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *