நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கான் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவந்த உள்ளநாட்டு போர் முடிவுக்குவந்துள்ள நிலையில் , தலிபான்கள் தலைநகர் கபூலைக் கைப்பற்றிய பிறகு நுற்றுக் கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற, விமானங்களில் ஏறுவதற்கு திரண்டும் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதன்படி நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு திரண்டனர். இந்நிலையில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட காணொளிகள், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற விமானத்தில் ஏறுவதற்கு திக்குமுக்காடுவதை வெளிக்காட்டியுள்ளது.
இதெவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடிமக்கள் மற்றும் அதன் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா காபூல் விமான நிலையத்தில் 6,000 வீரர்களை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க இராணுவம் காபூல் விமான நிலையத்தின் சுற்றளவை பாதுகாத்துள்ளது, இது பிரான்ஸ் போன்ற சில நாடுகளுக்கான செயல் தூதரகமாகவும் செயல்படுகிறது.
இதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் வணிக விமானங்கள் அப்பகுதிக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நிறுத்தப்பட்டன என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.
யுனைடெட் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏயர்வேஸ் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள், ஆப்கானிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்க விமானங்களை மீண்டும் வழிமாற்றி வருவதாகக் கூறின.
மேலும் ஒரு வார இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளனர்