இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பாம்பு!

அரியவகை இரண்டு தலை பாம்பு பிடிப்பட்டுள்ள சம்பவம் வனத்துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரியவகை இரண்டு தலை பாம்பு ஒன்று அங்குள்ள விகாஸ் நகர்ப் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்கூட வளாகத்தில் இருப்பதைப் பார்த்த தொழிலாளர்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

உடனடியாக வனத்துறையின் பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்த அடில் மிர்சாவை அழைத்துள்ளனர்.  

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அடில் மிர்சா, அந்த பாம்பைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

காரணம் அது இரண்டு தலை கொண்ட நாகப்பாம்பு ஆகும். இதுகுறித்து பேசிய அடில் மிர்சா, ”15 ஆண்டுக் காலம் பாம்புகளைப் பிடிக்கும் பணியைச் செய்து வருகிறேன்.

எனது பணி அனுபவத்தில் இரண்டு தலை கொண்ட நாகப்பாம்பைப் பார்ப்பது இதுவே முதல் முறை” எனத் தெரிவித்தார். ஒன்னரை அடி நீளம் இருந்த அந்த பாம்பு பிறந்து இரண்டு வாரமான குட்டி என அடில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *